சட்டவிரோத மீன்பிடிக்கு 31 ஆம் திகதியுடன் தடை

சட்டவிரோத மீன்பிடிக்கு 31 ஆம் திகதியுடன் தடை

by Staff Writer 13-12-2019 | 3:32 PM
Colombo (News 1st) சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுதல் எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் தடை செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார். சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவோரை கைது செய்யும் நடவடிக்கைகள் எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து ஆரம்பிக்கப்படுமெனவும் அவர் கூறியுள்ளார். இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த போதிலும் தொடர்ந்தும் அத்தகைய செயற்பாடுகள் இடம்பெறுவதாக இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த சுட்டிக்காட்டியுள்ளார்.