by Staff Writer 13-12-2019 | 9:12 PM
Colombo (News 1st) இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் இன்றைய மூன்றாம் நாள் ஆட்டமும் சீரற்ற வானிலையால் தடைப்பட்டு முடிவுக்கு வந்தது.
இன்று 5.2 ஓவர்களை மாத்திரமே வீச முடிந்ததுடன், முதலில் துடுப்பெடுத்தாடும் இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 282 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்ட நேரம் முடிவுக்கு வந்தது.
ராவல்பிண்டியில் நடைபெறும் இந்தப் போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 263 ஓட்டங்களுடன் இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்தது.
தனஞ்சய டி சில்வா 72 ஓட்டங்களுடனும், டில்ருவன் பெரேரா 2 ஓட்டங்களுடனும் ஆட்டத்தை தொடர்ந்தனர்.
என்றாலும், இன்றைய தினத்தில் 5.2 ஓவர்களை மாத்திரமே வீச முடிந்தது.
இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 282 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ஆட்டம் தடைப்பட்டது.
அதன் பிறகு ஆட்டத்தை தொடர முடியாமல் போக இன்றைய மூன்றாம் நாள் ஆட்டம் அத்துடன் முடிவுக்கு வந்தது.
தனஞ்சய டி சில்வா 87 ஓட்டங்களுடனும் டில்ருவன் பெரேரா 6 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதுள்ளனர்.
இது 10 வருடங்களின் பின்னர் பாகிஸ்தானில் நடைபெறும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியாகும்.