by Bella Dalima 11-12-2019 | 4:21 PM
விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்து பிரபலமான நகைச்சுவை நடிகர் சதீஷுக்கு இன்று திருமணம் நடைபெற்றது.
இவருக்கும் சிக்சர் பட இயக்குநரின் தங்கை சிந்துவுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. சிக்சர் படத்தில் நடிகர் வைபவ் உடன் சதீஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்ததால் இது காதல் திருமணம் என்று பேச்சு அடிபட்டது.
சிக்சர் பட இயக்குநரும் மணப்பெண்ணின் அண்ணனுமான இயக்குநர் சாச்சி, சதீஷின் திருமணம் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்று கூறி அந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்நிலையில், சதீஷ் - சிந்து திருமணம் இன்று காலை வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
நேற்று மாலை நடந்த திருமண வரவேற்பில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, நடிகர்கள் சத்யராஜ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, ஜீவா, ஜி.வி.பிரகாஷ், உதயநிதி ஸ்டாலின், கவுதம் கார்த்திக் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகைகள் இந்துஜா, அதுல்யா ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.