பிரான்ஸின் வரிக்கு எதிராக ட்ரம்பின் நடவடிக்கை

பிரான்ஸின் டிஜிட்டல் வரிக்கு எதிராக ட்ரம்பின் அதிரடி நடவடிக்கை

by Staff Writer 03-12-2019 | 6:55 PM
பிரான்ஸ், பிரேஸில் மற்றும் ஆர்ஜென்டீனா ஆகிய நாடுகளுக்கு எதிராக புதிய வரியை விதிப்பதற்கு அமெரிக்கா தீர்மானம் எடுத்துள்ளது. இதனால் 2.4 பில்லியன் பெறுமதியான பிரான்ஸ் தயாரிப்புகளுக்கும் பிரேஸில் மற்றும் ஆர்ஜென்டீனா ஆகிய தென் அமெரிக்க நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அலுமினியம் போன்ற பொருட்களுக்கும் புதிய வரி விதிக்கப்படவுள்ளது. இதன் காரணமாக பிரான்ஸின் சீஸ், கைப்பை, பெண்களுக்கான அலங்காரப் பொருட்கள் மற்றும் வைன் போன்ற பொட்களுக்கு 100 வீத வரி அறவிடப்படவுள்ளது. இதேவேளை, பிரேஸில் மற்றும் ஆர்ஜென்டீனாவிற்கு வரி விதித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், குறித்த நாடுகளின் விவசாயிகளுக்கும் தமது நாட்டு விவசாயிகளுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் நாணயப் பெறுமதியை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியின் இந்த திடீர் தீர்மானத்தால் தென் அமெரிக்க நாடுகள் அதிர்ச்சியில் உள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தமது நிறுவனங்களுக்கு எதிராக டிஐிட்டல் சேவை வரியை பிரான்ஸ் அறிமுகப்படுத்தியதால் தான் இத்தீர்மானத்தை எடுத்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.