by Bella Dalima 03-12-2019 | 5:01 PM
Colombo (News 1st) தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் பகுதியில் வீடொன்றின் சுற்றுச்சுவர் இடிந்து வீழ்ந்ததில் 17 பேர் பலியாகியுள்ளனர்.
இதனையடுத்து, குறித்த வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேட்டுப்பாளையம் அருகே உள்ள நடூர் பகுதியில் கட்டப்பட்டிருந்த சுற்றுச்சுவர் நேற்று மழை காரணமாக இடிந்து வீழ்ந்துள்ளது.
அருகிலிருந்த 3 வீடுகள் மீது சுவர் இடிந்து வீழ்ந்ததால் பாரிய உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இதனையடுத்து, வீட்டு உரிமையாளரைக் கைது செய்யுமாறு அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேதமடைந்து உடைந்து வீழும் நிலையில் இருந்த அந்த சுவரை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தும் அது நிறைவேற்றப்படாததாலேயே இந்த விபத்து நிகழ்ந்திருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், 17 பேர் இறப்பிற்கு காரணமான சுற்றுச்சுவரைக் கட்டிய வீட்டின் உரிமையாளரை பொலிசார் இன்று கைது செய்துள்ளனர்.