ஏறாவூரில் கணவன் மனைவியால் அடித்துக்கொலை

by Staff Writer 29-11-2019 | 5:22 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு - ஏறாவூரில் மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி கணவன் உயிரிழந்துள்ளார். ஏறாவூர் - கோரக்கல்லிமடு பகுதியில் நேற்றிரவு இந்த கொலைச்சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கணவன், மனைவிக்கு இடையிலான தகராறு வலுப்பெற்றதை அடுத்து தேங்காய் துருவியால் அடித்து மனைவியால் கணவன் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறினர். உயிரிழந்தவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உயிரிழந்தவரின் மனைவியும் 21 வயதான மகளும் 17 வயதான மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.