பங்களாதேஷ் உணவக தாக்குதல்: 7 பேருக்கு மரண தண்டனை

பங்களாதேஷ் உணவகம் மீது தாக்குதல் நடத்திய 7 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை

by Bella Dalima 27-11-2019 | 5:26 PM
Colombo (News 1st) 2016 இல் பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் உணவகமொன்றின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் தொடர்பான வழக்கில் 7 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உணவகத்திற்குள் நுழைந்தவர்கள் நடத்திய தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களில் அதிகமானோர் வௌிநாட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தாக்குதலை திட்டமிட்டு தாக்குதல்தாரிகளுக்கு ஆயுதங்களை வழங்கிய 8 பேருக்கு எதிராக ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டுள்ளது. சுமார் 12 மணித்தியாலங்கள் வரை உணவகத்தில் இருந்தவர்கள் பணையக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்தனர். பங்களாதேஷில் நடத்தப்பட்ட மிக மோசமான பயங்கரவாத தாக்குதலாக இது கருதப்படுகின்றது. இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாதிகள் உரிமை கோரிய போதிலும் அதனை மறுத்த அதிகாரிகள், உள்நாட்டில் இயங்கும் பயங்கரவாத குழுவொன்றே தாக்குதலின் பின்னணியில் உள்ளதாக அறிவித்தது. இந்த தாக்குதலின் பின்னர் பங்களாதேஷ் அதிகாரிகள் பயங்கரவாத அமைப்புக்களை ஒழிக்க மிருகத்தனமான அடக்குமுறைகளை மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.