by Staff Writer 25-11-2019 | 6:46 PM
Colombo (News 1st) மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தனது இராஜினாமா கடிதத்தை ஒப்படைத்துள்ளார்.
எதிர்வரும் டிசம்பர் 20ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் தாம் இராஜினாமா செய்வதாக குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இம் மாதத்தின் ஆரம்பப் பகுதியில் தனது இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் நியூஸ்பெஸ்டுக்குத் தெரிவித்துள்ளார்.
இது தனிப்பட்ட காரணங்களை அடிப்படையாகக் கொண்ட முடிவு எனவும் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தின் காரணமாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல எனவும் அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மத்திய வங்கியின் ஆளுநராக இந்திரஜித் குமாரசுவாமி நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.