வாக்களிப்பில் கலந்துகொண்ட முக்கிய பிரமுகர்கள்

by Bella Dalima 16-11-2019 | 7:55 PM
Colombo (News 1st) ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் கட்சித் தலைவர்கள் இன்று காலை வாக்களித்தனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலன்னறுவை - புதிய நகர் ஶ்ரீ வித்தியாலோக விகாரையில் அமைந்துள்ள வாக்கெடுப்பு நிலையத்தில் வாக்களித்தார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கொழும்பு பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்கெடுப்பு நிலையத்தில் வாக்களித்தார். ஹம்பாந்தோட்டை - மெதமுலன டீ.ஏ. ராஜபக்ஸ கல்லூரியில் அமைந்துள்ள வாக்கெடுப்பு நிலையத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ வாக்களித்தார். சபாநாயகர் கரு ஜயசூரிய மஹர ரத்முதுகல விகாரையில் அமைந்துள்ள வாக்கெடுப்பு நிலையத்தில் வாக்களித்தார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, நிட்டம்புவ வித்தியானந்த பிரிவேனவில் அமைந்துள்ள வாக்கெடுப்பு நிலையத்தில் வாக்களித்தார். தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி கொழும்பு ரோயல் கல்லூரியில் அமைந்துள்ள வாக்கெடுப்பு நிலையத்தில் வாக்களித்தார். தம்பான ஆதிவாசி தலைவர் வனஸ்பதி ஊருவரிகே வன்னிலாத்தே, தம்பதான கனிஷ்ட வித்தியாலயத்தில் வாக்களித்தார். ஹேமா பிரேமதாச கொழும்பு புதுக்கடையிலுள்ள மாநகர சபை அலுவலகத்திற்கு சென்று வாக்களித்தார். மெதமுலன டி.ஏ. ராஜபக்ஸ மகா வித்தியாலயத்தில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ வாக்களித்தார். மத்துகம ஹொரவல மகா வித்தியாலயத்தில் குமார வெல்கம வாக்களித்தார். பிரசன்ன ரணதுங்க உடுகம்பொல - ரோமன் கத்தோலிக்க கனிஷ்ட வித்தியாலயத்தில் வாக்களித்தார். பண்டாரகம தேசிய பாடசாலையில் அஜித் பீ. பெரேரா வாக்களித்தார். மெனிகின்ன, வலல ஏ.ரத்நாயக்க கல்லூரியில் திஸ்ஸ அத்தநாயக்க வாக்களித்தார். பேருவளை, ஹெட்டிமுல்ல ஶ்ரீ வர்தனாராம விகாரையில் ராஜித சேனாரத்ன வாக்களித்தார். ஹொரணை - ரஜமகா விகாரையில் விதுர விக்ரமநாயக்க வாக்களித்தார். மாத்தறை, ஶ்ரீ புஸ்பாராம விகாரையில் புத்திக பத்திரண வாக்களித்தார். அம்பலாங்கொடை - பொல்வத்த புத்ததத்த வித்தியாலயத்தில் ஷான் விஜயலால் வாக்களித்தார். தெஹிவளை, ஶ்ரீ மாகா போதி விகாரையில் எஸ்.எம்.மரிக்கார் வாக்களித்தார். வெல்லம்பிட்டி , சாராநாத் வாக்கெடுப்பு நிலையத்தில் சுசில் கிந்தெல்பிட்டிய வாக்களித்தார். பொரளை, சுசமயவர்தன வித்தியாலயத்தில் ஜயந்த டி சில்வா வாக்களித்தார். வௌ்ளவத்தை, ஆர்துசா மகா வித்தியாலயத்தில் உமாச்சந்திரா பிரகாஷ் வாக்களித்தார்.