ஜனாதிபதித் தேர்தல் இன்று

ஜனாதிபதித் தேர்தல் இன்று

by Staff Writer 16-11-2019 | 6:58 AM
Colombo (News 1st) 2019 ஜனாதிபதித் தேர்தல் வாக்கெடுப்பு இன்று (16) முன்னெடுக்கப்படுகின்றது. காலையிலே வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு வாக்காளர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது. 35 வேட்பாளர்கள் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதுடன் இந்தத் தேர்தலின் மூலம் 7ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி தெரிவு செய்யப்படவுள்ளார். 12 845 மத்திய நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெறவுள்ளது. கடந்த காலங்களில் நாட்டில் 4 மணிக்கு வாக்களிப்பு நிறைவுபெற்ற போதிலும் இம்முறை 5 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. சுமார் 3 இலட்சம் அரச அதிகாரிகள் தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வாக்காளர்கள் தங்களின் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களுடன் வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்ல வேண்டும் என பிரதி தேர்தல்கள் ஆணையாளர் சிவசுப்ரமணியம் அச்சுதன் தெரிவித்துள்ளார்.