கண்காணிப்பாளர்களின் கண்காணிப்பு நடவடிக்கை ஆரம்பம்

கண்காணிப்பாளர்களின் கண்காணிப்பு நடவடிக்கை ஆரம்பம்

by Staff Writer 16-11-2019 | 9:56 AM
Colombo (News 1st) ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு நாட்டிற்கு வருகை தந்துள்ள வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் மற்றும் உள்நாட்டுக் கண்காணிப்பாளர்கள் தமது கண்காணிப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். தமது அழைப்பின் பேரில் நாட்டிற்கு வருகை தந்துள்ள 17 வௌிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க குறிப்பிட்டுள்ளார். இதனைத் தவிர ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த 88 கண்காணிப்பாளர்களும் தெற்காசிய தேர்தல் அதிகாரிகள் அமைப்பின் 20 கண்காணிப்பாளர்களும் பொதுநலவாய அமைப்பின் 15 தேர்தல் கண்காணிப்பாளர்களும் சுதந்திரத் தேர்தலுக்கான ஆசிய வலய கண்காணிப்பாளர்கள் 45 பேரும் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு நாட்டை வந்தடைந்துள்ளனர். தமது அமைப்பை சேர்ந்த 3000 பேர் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக தேர்தல் வன்முறை கண்காணிப்பு மத்திய நிலையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மஞ்சுல கஜநாயக தெரிவித்துள்ளார்.