by Bella Dalima 15-11-2019 | 8:17 PM
Colombo (News 1st) ஹம்பாந்தோட்டையில் வாக்குப்பெட்டிகளை கொண்டு சென்றுகொண்டிருந்த வேனில் இருந்து 58 போலி வாக்குச்சீட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முல்கிரிகல தேர்தல் தொகுதிக்குட்பட்ட இத்ததெமலிய வாக்களிப்பு நிலையத்திற்கு வாக்குப்பெட்டிகள் எடுத்து செல்வதற்காக குறித்த வேன் ஹம்பாந்தோட்டை சூச்சீ தேசிய பாடசாலைக்கு சென்றுள்ளது.
அதிகாரிகள் வாக்குப்பெட்டியை வேனுக்கு எடுத்துச் சென்ற போது வேன் சாரதியின் ஆசனத்திற்கு அருகில் போலி வாக்குச்சீட்டுகள் காணப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த போலி வாக்குச்சீட்டுகள் புள்ளடியிடப்படாத நிலையில், வாக்காளர்களுக்கு தௌிவூட்டுவதற்காக மாத்திரம் என குறிப்பிடப்பட்டுள்ளது.