ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து வரும் கங்கனா ரணாவத், தமிழ் எளிமையான மொழி அல்ல என கூறியுள்ளார்.
விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடிப்பில் உருவாகும் படம் ‘தலைவி’. இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு மைசூரில் தொடங்கியுள்ளது. மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகிறது. கங்கனா ரணாவத், அரவிந்த்சாமி, மதுபாலா ஆகியோர் நடிப்பதை மட்டுமே படக்குழு இதுவரை உறுதிப்படுத்தியுள்ளது. வேறு யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பதை படக்குழு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
‘தலைவி’ படத்தில் நடிக்கும் அனுபவம் குறித்து நடிகை கங்கனா ரணாவத் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில்,
எனக்கு தமிழ் கற்பது மிகவும் கடினமாக உள்ளது. இதன் காரணமாக நான் வசனங்களை மனப்பாடம் செய்கிறேன். தமிழ் நிச்சயம் எளிமையான மொழி அல்ல. நான் ஆங்கிலம் கற்றது போல தமிழை முழுமையாக கற்றுக்கொள்ள நினைத்தேன். ஆனால், தற்போது படத்தின் தேவைக்காக மட்டும் கற்றுக்கொள்கிறேன்
என்று தெரிவித்துள்ளார்.