by Fazlullah Mubarak 27-10-2019 | 3:43 PM
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 7 உள்ளூர் மீனவர்கள், யாழ் - குறிகட்டுவான் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில், நேற்று பிற்பகல் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபர்களிடமிருந்து 70 சங்குகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஊர்காவற்றுறை, நெடுந்தீவு மற்றும் புங்குடுதீவு பகுதிகளை சேர்ந்தவர்களே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளுக்காக யாழ். கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.