2015 ஆம் ஆண்டு தோற்கடிக்கப்பட்ட அரசாங்கத்தை மீண்டும் உருவாக்க வேண்டாம்: அனுரகுமார திசாநாயக்க

by Bella Dalima 24-10-2019 | 9:48 PM
Colombo (News 1st) தேசிய மக்கள் சக்தியின் பொதுக்கூட்டம் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க தலைமையில் வெல்லவாய நகரில் நேற்று (23) நடைபெற்றது. மக்கள் விடுதலை முன்னணியின் செயற்பாட்டாளர்கள், பிரதேச மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட சிலர் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர். இக்கூட்டத்தில் உரையாற்றிய தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க,
இந்த நாட்டை அழித்த, கொள்ளையிட்ட, பொருட்களின் விலையை அதிகரித்த, வரிகளை அறவிட்ட, எமது காணிகளை நிறுவனங்களுக்கு விற்ற, தெங்கிற்கான நிவாரணங்களை நிறுத்திய, விவசாயிகளுக்கான ஓய்வூதியத்தை இரத்து செய்த விடயங்களுக்காக வீட்டிற்கு அனுப்பிய மஹிந்தவின் ஆட்சியை மீண்டும் உருவாக்க வேண்டுமா? 2015 ஆம் ஆண்டு தோற்கடித்த ஆட்சியை இந்த நாட்டில் மீண்டும் உருவாக்க வேண்டாம். அரசியலின் ஊடாக இந்த நெருக்கடிகள் ஏற்பட்டன. எமது கல்வியை இந்த அரசாங்கமே வீழ்ச்சியடையச் செய்தது. தனியார் பிரிவை அரசாங்கமே வீழ்ச்சியடையச் செய்தது. சட்டம் மற்றும் ஒழுக்கமற்ற அரசாங்கத்தை இந்த அரசாங்கமே உருவாக்கியது. எமது விவசாயத்தை இந்த அரசாங்கமே அழித்தது. இந்த நெருக்கடிகளை அரசியலே உருவாக்கியது. அவ்வாறு எனின் பதில் எங்குள்ளது? இந்த நெருக்கடிகளில் மீள்வதற்கான இடமும் அரசியலே. அதனால் இந்த தவறான அரசியலில் இருந்து 71 வருடமாக மாறி மாறி வந்த ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இருந்து மீள்வதற்கான காலம் எழுந்துள்ளது. நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இதனை முடிவுக்கு கொண்டுவர நான் அழைப்பு விடுக்கின்றேன்.
என குறிப்பிட்டார்.