by Bella Dalima 22-10-2019 | 4:05 PM
Colombo (News 1st) மனித உணர்வுகளைக் கண்டறியும் செயற்கை தோலை பிரிட்டனில் உள்ள பிரிஸ்டல் பல்கலைக்கழகம், பிரான்ஸ் சோபோர்ன் பல்கலைக்கழகம் மற்றும் டெல்காம் பாரிஸ்டெக் நிறுவனங்களில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த செயற்கை தோல், சிலிக்கான் (Silicone Membrane) மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.
மனித தோல் மாற்று அறுவை சிகிச்சைதான் தங்களின் இலக்கு என செயற்கைத் தோலை கண்டுபிடித்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த செயற்கைத் தோலை செல்போனில் இணைத்துக்கொண்டு, அதை அழுத்தி பிடிக்கும் போது, கோபம் என்ற உணர்ச்சியை அது வெளிப்படுத்தும். மெதுவாக வருடினால் கூச்சம் என்ற உணர்வை வெளிப்படுத்தும்.
மனிதன் - கணினி உறவுகள் பிரிவில் இணைப்பேராசிரியர் Dr Anne Roudaut முன்னிலையில் இந்த ஆராய்ச்சி தற்போது நடைபெற்று வருகிறது.