by Staff Writer 22-10-2019 | 10:13 PM
Colombo (News 1st) இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் M.S.செல்லச்சாமி இன்று புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்குவதாகத் தெரிவித்தார்.
கொழும்பு வொக்ஸ்ஹோல் வீதியில் அமைந்துள்ள சஜித் பிரேமதாசவின் ஜனாதிபதி தேர்தல் அலுவலகத்திற்கு சென்று அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது இடம்பெற்ற ஊடக சந்திப்பில் திஸ்ஸ அத்தநாயக்க, S.M.மரிக்கார் மற்றும் மயந்த திசாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.