வேட்பாளர்களுக்கு ஆணைக்குழு விடுக்கும் அறிவுறுத்தல்

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவுறுத்தல்

by Staff Writer 20-10-2019 | 8:41 AM
Colombo (News 1st) ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு வழங்கப்படும் ஒலி, ஔிபரப்பிற்கான நேரம், வேறெந்த வேட்பாளரையும் ஆதரிப்பதற்காகப் பயன்படுத்துவற்கு இடமளிக்கப்பட மாட்டாது என ​தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி வேட்பாளர்களுக்காக வழங்கப்பட்டுள்ள ஒலி, ஔிபரப்பிற்கான நேர ஒதுக்கீடு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்பிரகாரம், ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு அரச தொலைக்காட்சி மற்றும் அரச வானொலி ஊடாக உரைநிகழ்த்துவதற்கு 45 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. குறித்த வேட்பாளரின் உரையைப் பதிவுசெய்து அதனை பரிசோதித்த பின்னர் ஒலி, ஔிபரப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பதிவு செய்யப்பட்ட உரை வேறொரு வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அமையும் பட்சத்தில் அதனை ஒலி, ஔிபரப்பு செய்யாதிருப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.