யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் நாளை திறப்பு

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் நாளை திறப்பு

by Staff Writer 16-10-2019 | 5:47 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் நாளை (17) உத்தியோகப்பூர்வமாக திறக்கப்படவுள்ளது. யாழ். சர்வதேச விமான நிலையத்தின் புனரமைப்பு செயற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியடைந்துள்ளன. விமான நிலையத்தின் புனரமைப்புப் பணிகள் கடந்த ஜூலை மாதம் 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன. இந்நிலையில், இந்திய அரசுக்கு சொந்தமான எயார் இந்தியா விமானமொன்று நேற்று (15) யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் பரீட்சார்த்தமாக தரையிறக்கப்பட்டது. நாளைய தினம் சென்னையிலிருந்து பயணிகள் விமானம் ஒன்று யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தரவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, இலங்கை குடிவரவு, குடியகல்வு சட்டத்திற்கு அமைய யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து நாட்டிற்குள் வருகை தரவும் நாட்டிலிருந்து வௌியேறுவதற்குமான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அதிவிசேட வர்த்தமானி உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ளது. இதனிடையே, மட்டக்களப்பு மற்றும் இரத்மலானையில் அமைந்துள்ள கொழும்பு சர்வதேச விமான நிலையங்களுக்கும் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அதிவிசேட வர்த்தமானியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.