Colombo (News 1st) அமெரிக்க பிரதிநிதிகள், மலையக அரசியல்வாதிகளுக்கு இடையில் நடைபெற்றதாகக் கூறப்படும் சந்திப்பு தொடர்பில் பொதுஜன பெரமுனவின் ஊடக சந்திப்பில் இன்று கருத்துக் கூறப்பட்டது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்,
அமெரிக்க தூதரக அதிகாரிகள் ஆறுமுகன் தொண்டமானை சந்தித்துள்ளனர். ஏன் சந்திக்கின்றனர்? ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சந்திக்கின்றனர். இது அமெரிக்க ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் தேர்தல் அல்ல
இலங்கைக்கான அமெரிக்க பிரதி தூதுவர் மார்டின் டீ கெலி மற்றும் அரசியல் தலைமை அதிகாரி ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமானை சந்தித்தமை தொடர்பிலேயே அவர் அவ்வாறு கருத்து தெரிவித்தார்.
அமெரிக்க பிரதிநிதிகள் மலையகத்தில் மேற்கொண்ட விஜயத்தின்போது, பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினரான சி.பி. ரத்நாயக்கவையும் சந்தித்துள்ளதாக அமெரிக்க தூதரகத்தின் உத்தியோகப்பூர்வ ட்விட்டர் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.