தொடர் மழை; கங்கைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

களு, கிங், நில்வளா கங்கைகளின் நீர்மட்டம் தொடர்ந்தும் அதிகரிப்பு

by Staff Writer 26-09-2019 | 7:07 AM
Colombo (News 1st) களு, கிங் மற்றும் நில்வளா கங்கைகளின் நீர்மட்டம் தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதனையடுத்து, நில்வளா கங்கையின் பானதுகம, மாபக பகுதிகள் பெருக்கெடுக்கும் நிலையை அண்மித்துள்ளதாகவும் திணைக்களம் அறிவித்துள்ளது. இவேளை, நில்வளா கங்கையின் நீர்மட்டம் தவளம மற்றும் பத்தேகம பகுதிகளில் தொடர்ந்தும் அதிகரித்து காணப்படுகின்றது. இதனால் பத்தேகம, போபோ போத்தல, வெலிவிட்டிய, திவிதுர, நாகொட, நியாகம, தவளம மற்றும் நெலுவ பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்களை அவதானமாக இருக்குமாறு இடர்முகாமைத்து நிலையம் கேட்டுகொண்டுள்ளது. இதேவேளை, அத்தனகளு ஓயாவின் நீர்மட்டம் தூனமலை பகுதியில் அதிகரித்துள்ளதாக நிலையம் அறிவித்துள்ளது. இந்தநிலையில், பெய்துவருகின்ற பலத்த மழையினால் சுமார் 42 000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.