by Staff Writer 22-09-2019 | 12:45 PM
Colombo (News 1st) தேசிய பாடசாலைகளில் நிலவும் மாணவர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
தேசிய பாடசாலைகளில் 40 000 இற்கும் அதிக மாணவர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுவதாக கல்வியமைச்சின் மேலதிக செயலாளர் M.M. ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், குறித்த வெற்றிடங்களைப் பூர்த்திசெய்யும் நோக்கில் மாணவர்களுக்கான நேர்முகப் பரீட்சைகள் தற்போது இடம்பெறுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதன் முதற்கட்டமாக 4500 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் மேலதிக செயலாளர் M.M. ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களைப் பதிவுசெய்வதற்காக அவர்களுக்கான கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.