வாகன இறக்குமதி வர்த்தகம் தொடர்பில் பாராளுமன்ற விசாரணையில் அம்பலம்
by Staff Writer 21-09-2019 | 10:44 PM
Colombo (News 1st) விசேட நடவடிக்கைக்கு என குறிப்பிட்டு குறைந்த சுங்கக் கட்டணத்தை செலுத்தி வாகனங்களை இறக்குமதி செய்யும் நடவடிக்கை தொடர்பில் உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு பாராளுமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாராளுமன்றத்தின் கணக்காய்வுக் குழுவினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போதே இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
விசேட நடவடிக்கைக்கு என கூறி 2010 ஆம் ஆண்டிலிருந்து 2014 ஆம் ஆண்டு வரை 414 வாகனங்களும் 2018ஆம் ஆண்டில் 112 வாகனங்களும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
மேலதிகத் தகவல்களை காணொளியில் காண்க...