by Staff Writer 20-09-2019 | 6:38 PM
Colombo (News 1st) கொழும்பு - கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களிலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் ரயில்கள் தாமதமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் மார்க்கத்தில் ஏற்பட்ட சமிக்ஞை கோளாறு காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
கொழும்பு கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களுக்கு இடையில் ஏற்பட்ட சமிக்ஞை கோளாறு தற்போது திருத்தப்படுவதாக ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ குறிப்பிட்டார்.
சமிக்ஞை கோளாறு காரணமாக இன்று காலை முதல் 50-க்கும் மேற்பட்ட ரயில்கள் தாமதமடைந்துள்ளன.
இதேவேளை, ரயில்வே தொழிற்சங்கத்தினரால் ஆரம்பிக்கப்பட்ட சட்டப்படி வேலை போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.