by Staff Writer 19-09-2019 | 4:43 PM
Colombo (News 1st) நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்து செய்வதற்கான பிரேரணை இன்று நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரேரணை தொடர்பில் அமைச்சர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட அமைச்சர்கள் சிலர் தமது அதிருப்தியை வௌியிட்டுள்ளனர்.
தற்போதைய சூழ்நிலையில் இவ்வாறானதொரு பிரேரணையை சமர்ப்பிப்பது சாலச்சிறந்தது அல்லவென அமைச்சர் சஜித் பிரேமதாச அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு குறிப்பிட்டார்.
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு கோரல் மற்றும் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதன் பின்னர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இரத்து செய்வதற்கான பிரேரணையை சமர்ப்பிப்பது ஜனநாயகம் அல்ல எனவும் அமைச்சர் சஜித் பிரேமதாச கூறினார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மாலை 3.30 அளவில் அமைச்சரவை கூடியமை குறிப்பிடத்தக்கது.