by Staff Writer 19-09-2019 | 7:51 PM
Colombo (News 1st) ஜனாதிபதித் தேர்தலுக்காக சுயேட்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட மூவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெடகொட, மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.அமரசிங்க மற்றும் இலங்கை சோசலிசக் கட்சி சார்பில் கலாநிதி அஜந்தா பெரேரா ஆகியோர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை அரச ஊழியர்கள் இன்று முதல் சமர்ப்பிக்க முடியும்.
எதிர்வரும் 30 ஆம் திகதி வரை தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என தேசிய தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.