நடிகர் ராஜசேகர் காலமானார்

நடிகர் ராஜசேகர் காலமானார்

by Chandrasekaram Chandravadani 08-09-2019 | 2:00 PM
பிரபல நடிகரும் இயக்குநருமாகிய ராஜசேகர் தனது 57ஆவது வயதில் இன்று (08) இயற்கை எய்தியுள்ளார். உடல்நலக் குறைவு காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே இவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவர் பார்வைகள் பலவிதம், சின்னப்பூவே மெல்லப் பேசு உள்ளிட்ட சில படங்களை இணைந்து இயக்கியவராவார். அதுமட்டுமன்றி, பாரதிராஜாவின் நிழல்கள் படத்தில் நடிகராக அறிமுகமாகியவர் இந்த ராஜசேகர். இதனைத் தவிர, அண்மையில் தொலைக்காட்சி நாடகங்களில் அக்கறை காட்டி வந்த ராஜசேகர், சரவணன் மீனாட்சி நாடகத்தின் மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதைக் கொள்ளை கொண்டவர் என்று கூறினால் அது மிகையாகாது. அதேநேரம், தற்போது ஔிபரப்பாகிக் கொண்டிருக்கும் சத்யா என்ற தொலைக்காட்சித் தொடரிலும் ராஜசேகர் நடித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.