சிறையிலிருந்து தப்பிச்சென்ற கைதி கைது

சிறையிலிருந்து தப்பிச்சென்ற கைதி 2 வருடங்களின் பின் கைது

by Staff Writer 08-09-2019 | 9:08 AM
Colombo (News 1st) பல்லேகலை சிறைச்சாலையில் இருந்து தப்பிச்சென்ற கைதி ஒருவர் 2 வருடங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைதி பல்வேறு பகுதிகளிலுள்ள வீடுகளில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அலுவிஹார பகுதியைச் சேர்ந்த 35 வயதான இந்தக் குற்றவாளி, 2017 ஆம் ஆண்டு சிறைச்சாலையிலிருந்து தப்பிச் சென்றுள்ளார். கைதியை இன்றைய தினம் மாத்தளை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.