எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி வௌியீடு

by Staff Writer 03-09-2019 | 6:54 PM
Colombo (News 1st) எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலை ஒக்டோபர் 11 ஆம் திகதி நடத்துவதற்கான அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி நடத்த முடியும் என்ற பரிந்துரையை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளதாக காலி மாவட்ட செயலாளர் சோமரத்ன விதானபத்திரண தெரிவித்தார். இதற்கிணங்க தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இந்த அறிவிப்பை வர்த்தமானியில் பிரசுரிக்க சம்பந்தப்பட்ட பிரிவிற்கு அறிவித்துள்ளதாக காலி மாவட்ட செயலாளர் சோமரத்ன விதானபத்திரண குறிப்பிட்டார். எல்பிட்டி பிரதேச சபைக்கான தேர்தலை எதிர்வரும் ஒக்டோபர் 5 முதல் 15 ஆம் திகதிக்குள் நடத்துவதற்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது. எல்பிட்டி பிரதேச சபைக்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக உடனடியாக தேர்தலை நடத்துமாறு உயர் நீதிமன்றம் கடந்த 30 ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டது.