by Staff Writer 24-08-2019 | 8:03 PM
Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை இரண்டு வாரங்களுக்குள் பெயரிடுவதாக அக்கட்சியின் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறுகின்றனர்.
அலரி மாளிகையில் நேற்றிரவு இடம்பெற்ற விருந்துபசாரத்தின் பின்னரும் இன்று நடைபெற்ற சில நிகழ்வுகளிலும் இது தொடர்பில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகளை விருந்துபசாரத்திற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்றிரவு அழைத்திருந்தார்.
2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அரசாங்கத்தை அமைத்து, நான்கு வருட பூர்த்தியை முன்னிட்டு இந்த விருந்துபசாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.