by Staff Writer 21-08-2019 | 4:56 PM
Colombo (News 1st) அவன்ற் கார்ட் நிறுவன தலைவர் மேஜர் நிஷங்க சேனாதிபதி உள்ளிட்ட 13 பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை விசாரிக்க மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாமை நியமிக்குமாறு சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா இன்று மாலை பிரதம நீதியரசரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவன்ற் கார்ட் மெரிடைம் சர்விசஸ் நிறுவனத்திற்கு சொந்தமான எம்.வி. அவன்ற் கார்ட் என்ற கப்பல் சட்டரீதியான அனுமதிப்பத்திரத்தைப் பெறாது, சட்டவிரோதமாக 816 தன்னியக்க துப்பாக்கிகள், 2,02,395 ரவைகள் ஆகியவற்றை களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமை உள்ளிட்ட 7,573 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இலங்கை நீதிமன்ற வரலாற்றில் அதிக குற்றச்சாட்டுகளின் கீழ் பிரதிவாதிகளுக்கு எதிராக சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட முதலாவது வழக்கு இது என சட்ட மா அதிபரின் இணைப்பதிகாரி நிஷாரா ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார்.