by Staff Writer 15-08-2019 | 8:18 PM
Colombo (News 1st) மஹிந்த ராஜபக்ஸ பொதுஜன பெரமுனவின் தலைவராக நியமிக்கப்பட்டமையினால், எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் மாற்றம் ஏற்படுமா என ஊடகவியலாளர்கள் இன்று ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகரவிடம் கேள்வி எழுப்பினர்.
இந்தக் கேள்விக்கு பதிலளித்த தயாசிறி ஜயசேகர, அது தொடர்பில் தமக்குத் தெரியாது எனவும் எதிர்காலமே அதனைத் தீர்மானிக்கும் எனவும் பதிலளித்தார்.
மேலும், ஐக்கிய தேசியக் கட்சி அத்தகைய குற்றச்சாட்டை முன்வைக்குமாக இருந்தால், அக்கட்சி பாராளுமன்றத்தில் அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் என குறிப்பிட்டார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி, பாராளுமன்றத்திற்கு தெரிவான மஹிந்த ராஜபக்ஸ, ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியில் அங்கம் வகித்துக் கொண்டே, பொதுஜன பெரமுன என்ற பெயரில் கட்சியொன்றை ஸ்தாபித்து அதன் தலைமைப் பொறுப்பை ஏற்றமை கட்சியின் யாப்பை மீறும் செயல் என கடந்த 12 ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் அமைச்சர் கபீர் ஹாசிம் அறிக்கையொன்றை வௌியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.