செஞ்சோலை படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவு தினம்

by Staff Writer 14-08-2019 | 8:50 PM
Colombo (News 1st) செஞ்சோலை படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. முல்லைத்தீவு - செஞ்சோலையில் 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலில் 61 சிறுமிகள் கொல்லப்பட்டனர். செஞ்சோலை படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு முல்லைத்தீவு வள்ளிபுனம் பகுதியில் இன்று நடைபெற்றது. பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, எஸ்.சிவமோகன் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டிருந்தனர். செஞ்சோலை தாக்குதலில் இரண்டு பிள்ளைகளை இழந்த தந்தையொருவர் பிரதான சுடரை ஏற்றி வைத்தார். செஞ்சோலை படுகொலை நினைவு தினம் யாழ். பல்கலைக்கழகத்திலும் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினால் இந்த நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. செஞ்சோலையில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் உருவப்படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.