குவாத்தமாலா அதிபராக கியாமடேய் தெரிவு

குவாத்தமாலா அதிபராக அலெஜாண்ட்ரோ கியாமடேய் தெரிவு

by Bella Dalima 13-08-2019 | 3:49 PM
மத்திய அமெரிக்க நாடான குவாத்தமாலாவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அலெஜாண்ட்ரோ கியாமடேய் (Alejandro Giammattei) வெற்றி பெற்றார். குவாத்தமாலா அதிபர் ஜிம்மி மொரால்ஸின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரியோடு முடிவடைய உள்ள நிலையில், அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகளை அந்நாட்டுத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் திங்கள்கிழமை (12) மேற்கொண்டனர். இதில் முன்னாள் அதிபர் அல்வாரோ கொலம்மின் மனைவி சாண்ட்ரா டாரஸை தோற்கடித்து, கியாமடேய் வெற்றி பெற்றார். கியாமடேய்க்கு 58.5 சதவீத வாக்குகள் கிடைத்ததாகத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. தற்போதைய அதிபர் மொரால்ஸ், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புடன் மேற்கொண்ட அகதிகள் ஒப்பந்தம் குவாத்தமாலா மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் புதிய அதிபர் கியாமடேய் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.