3050 போதை வில்லைகளுடன் இளைஞர் கைது

15 மில்லியன் ரூபா பெறுமதியான போதை வில்லைகளுடன் இளைஞர் கைது

by Staff Writer 30-07-2019 | 9:09 PM
Colombo (News 1st) 15 மில்லியன் ரூபா பெறுமதியான போதை வில்லைகளுடன் சந்தேகநபர் ஒருவர் மத்திய தபால் பரிமாற்றகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 3050 போதை வில்லைகள் சந்தேகநபரிடமிருந்த பொதியிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன குறிப்பிட்டார். போர்த்துகல் நாட்டிலிருந்து குறித்த பொதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பொதியைப் பெற்றுக்கொள்ள மத்திய தபால் பரிமாற்றகத்திற்கு சந்தேகநபர் சென்றிருந்த போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு - 14 ஐ சேர்ந்த 27 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏனைய செய்திகள்