இந்தியா சென்றார் பிரதமர் ரணில்

இந்தியா சென்றார் பிரதமர் ரணில்

by Staff Writer 27-07-2019 | 7:58 PM

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளார்.

கர்நாடகா மாநிலத்திற்கு நேற்று சென்ற ரணில் விக்ரமசிங்க கொள்ளூர் ஶ்ரீ முகாம்பிகா தேவஸ்தானத்தில் இடம்பெற்ற பூர்ணாகுதி யாகத்தில் கலந்துக் கொண்டுள்ளார். மைத்திரி விக்ரமசிங்கவும் இந்த விஜயத்தில் கலந்துக் கொண்டுள்ளதுடன், இவர்கள் இருவரும் 2017 ஆம் ஆண்டும் இங்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. ரணில் விக்ரமசிங்கவின் விஜயம் காரணமாக , கொள்ளூர் ஶ்ரீ முகாம்பிகா தேவஸ்தான வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளனர். மேலும், பூர்ணாகுதி யாகத்திற்கு வரையறுக்கப்பட்ட பக்தர்களே அனுமதிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.