கறுவா உற்பத்தி: இலங்கைக்கு 4 ஆவது இடம்

கறுவா உற்பத்தி நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு நான்காவது இடம்

by Staff Writer 26-07-2019 | 7:05 PM
Colombo (News 1st) உலகளாவிய ரீதியில் இலங்கை கறுவா ஏற்றுமதியாளர்களுக்கு முக்கிய இடம் கிடைத்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், கறுவா உற்பத்தி நாடுகளின் பட்டியலில் இலங்கை நான்காவது இடத்தைப் பெற்றுள்ளமை புதிய ஆய்வொன்றினூடாகக் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மெக்சிக்கோ, அமெரிக்கா, பெரு, பொலிவியா, சிலி மற்றும் குவாத்தமாலா ஆகிய நாடுகளில் இலங்கையின் கறுவாவிற்கு பெரும் கேள்வி நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.