கொலன்னாவை நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நீர்வெட்டு

கொலன்னாவை நகர சபைக்குட்பட்ட பல பகுதிகளில் 16 மணித்தியால நீர்வெட்டு

by Staff Writer 25-07-2019 | 3:59 PM
Colombo (News 1st) கொலன்னாவை நகர சபைக்குட்பட்ட பல பகுதிகளுக்கும் இன்றிரவு 8 மணியிலிருந்து 16 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இதற்கு மேலதிகமாக மொரகஸ்முல்ல , எத்துல்கோட்டை, ஒபேசேகரபுர , பண்டாரநாயக்கபுர , நாவல, கொஸ்வத்தை , இராஜகிரிய முதல் நாவல திறந்த பல்கலைக்கழகம் வரையான பிரதான வீதி மற்றும் அதனுடன் தொடர்புபட்ட குறுக்கு வீதிகளிலும் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. கொலன்னாவை தடாகத்திற்கு நீர் விநியோகிக்கும் குழாய் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கசிவை சீர்செய்யும் நோக்கில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.