பாணந்துறை வடக்கு OIC பணிநீக்கம்

பாணந்துறை வடக்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பணிநீக்கம்

by Staff Writer 15-07-2019 | 4:26 PM
Colombo (News 1st) ரி - 56 ரக துப்பாக்கிகள் இரண்டு காணாமல் போனமை தொடர்பில், பாணந்துறை வடக்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். கடந்த 4ஆம் திகதி பாணந்துறை வடக்கு பொலிஸ் நிலையத்தின் கடமைகளைப் பொறுப்பேற்ற பொறுப்பதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை நடவடிக்கையின்போது ரி - 56 ரக இரண்டு துப்பாக்கிகள் காணாமல் போயிருந்தமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.