அமெரிக்க ஒப்பந்தங்களுக்கு இலங்கையில் எழும் எதிர்ப்புகளை உன்னிப்பாக அவதானிக்கும் இந்தியா

by Staff Writer 13-07-2019 | 7:29 PM
Colombo (News 1st) இலங்கை அமெரிக்காவுடன் ஏற்படுத்திக்கொள்ளவுள்ள ஒப்பந்தங்கள் தொடர்பில் நாடு முழுவதும் தெரிவிக்கப்பட்டு வரும் எதிர்ப்புகள் குறித்து இந்தியா உன்னிப்பாக அவதானித்து வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தமது அயல்நாடான இலங்கையில் இடம்பெறும் விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி வருவதாக அந்நாட்டின் நம்பத்தகுந்த தகவல்களை மேற்கோள்காட்டி The Economic Times பத்திரிகை உள்ளிட்ட இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. இலங்கையில் அமெரிக்காவிற்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற எதிர்ப்பு நடவடிக்கைகள் கடந்த மாதம் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவின் இலங்கை விஜயம் இரத்து செய்யப்படவும் காரணமாக அமைந்ததாக The Economic Times பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது.