வருமான வரி உச்சவரம்பில் மாற்றமில்லை

வரவு செலவுத் திட்டம் 2019: வருமான வரி உச்சவரம்பில் மாற்றமில்லை

by Staff Writer 05-07-2019 | 6:38 PM
இந்தியாவின் வளர்ச்சியையும் அடுத்த 10 ஆண்டுகளையும் இலக்காகக் கொண்டு இம்முறை வரவு செலவுத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நடப்பு நிதியாண்டிற்கான இடைக்கால வரவு செலவுத் திட்டம் கடந்த பெப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றவுடன் முழுமையான வரவு செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வரவு செலவுத் திட்டத்தில் வருமான வரி உச்சவரம்பில் மாற்றங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் வரிவிலக்கு பெறுவதில் புதிய சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், தங்கம், பெட்ரோல், சிகரெட் என்பன மீதான வரி விதிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் மின்னணு வாகனங்களுக்கான GST வரி 5 வீதம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் மாணவர்களைக் கவரும் வகையில் புதிய தேசிய அளவிலான கல்விக் கொள்கை விரைவில் அறிமுகப்படுத்தப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான புதிய அரசாங்கத்தின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சமர்ப்பிக்கும் முதலாவது வரவு செலவுத் திட்டம் இதுவென்பது குறிப்பிடத்தக்கதாகும்.