by Staff Writer 01-07-2019 | 10:05 PM
Colombo (News 1st) பிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் மிடில்டன் ஆகியோர் முதல்தடவையாக பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.
இளவரசர் சார்ள்ஸ் மற்றும் இளவரசி கெமிலா ஆகியோர் 2006ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொண்டிருந்ததுடன், 13 வருடங்களின் பின்னர் மீண்டும் அரச குடும்பத்தினர் பாகிஸ்தானுக்கு செல்லவுள்ளனர்.
எனினும், தொண்டு சேவைகளுக்காக இளவரசி டயானா பாகிஸ்தானுக்கு பல தடவைகள் பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அரச குடும்பத்தினரின் இந்த விஜயத்தின் மூலம் இரு நாட்டு உறவு மேலும் வலுவடையும் என பாகிஸ்தான் உயர்தானிகராலயம் தெரிவித்துள்ளது.