இராஜினாமா செய்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அஸ்கிரிய பீட மகாநாயக்கரை சந்தித்து விளக்கம்

by Staff Writer 11-06-2019 | 8:58 PM
Colombo (News 1st) அமைச்சுப் பதவிகளில் இருந்து இராஜினாமா செய்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று அஸ்கிரிய பீட மகாநாயக்கர் வரக்காகொட ஶ்ரீ ஞானரத்தன தேரரை சந்தித்து தாம் எடுத்த தீர்மானம் தொடர்பில் விளக்கமளித்துள்ளனர். அஸ்கிரிய விகாரையில் நடைபெற்ற இந்த சந்திப்பில் மல்வத்து பீட அனுநாயக்கர் நியங்கொட விஜித்த ஶ்ரீ தேரர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர். முன்னாள் அமைச்சர் A.H.M. பௌஸி தலைமையில் பல கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி முன்னாள் அமைச்சர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.

ஏனைய செய்திகள்