by Staff Writer 08-06-2019 | 5:17 PM
Colombo (News 1st) வவுனியாவிலுள்ள பனையோலை சார் உற்பத்தி கிராமத்தில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்திக்குமாறு கைத்தொழில் பிரதி அமைச்சர் புத்திக்க பத்திரண பணிப்புரை விடுத்துள்ளார்.
பனையோலை சார்ந்த உற்பத்தி அலுவலகத்தின் புனரமைப்பு பணிகளில் காணப்படும் பல்வேறு குறைபாடுகளை உரிய முறையில் பூர்த்தி செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன், குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படும் வரையில், ஒப்பந்தக்காரருக்குரிய கொடுப்பனவை நிறுத்தி வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, பனையோலை சார்ந்த உற்பத்திப் பொருட்கள் தரமானதாகக் காணப்படும் பட்சத்தில் அதனை ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.