by Staff Writer 03-06-2019 | 7:12 PM
Colombo (News 1st) உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு பின்னர் நடத்தப்பட்ட சுற்றிவளைப்புகளில் 2289 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் 1655 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 423 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 211 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.