பதவியில் இருக்கும் வரை சர்வதேச இராணுவத்தினரை நாட்டிற்கு வரவழைக்கப் போவதில்லை: ஜனாதிபதி உறுதி

by Staff Writer 01-06-2019 | 5:44 PM
Colombo (News 1st) பதவியில் இருக்கும் வரை சர்வதேச இராணுவத்தினரை நாட்டிற்கு வரவழைப்பதற்கு இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். நாட்டில் ஏழ்மையை இல்லாதொழித்து மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி சமூகத்தில் முன்னேற்றத்தை உருவாக்குவதற்கே கடந்த பல வருடங்களாக தாம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அதற்காக பல செயற்றிட்டங்களை முன்னெடுத்ததுடன், அபிவிருத்தியின் பிரதிபலன்கள் விவசாய மக்களுக்கு கிடைத்ததாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். பொலன்னறுவை - மெதிரிகிரிய பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

ஏனைய செய்திகள்