சஹ்ரானுடையது என சந்தேகிக்கப்படும் மடிக்கணினி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

by Staff Writer 31-05-2019 | 5:24 PM
Colombo (News 1st) மொஹமட் சஹ்ரானுடையது என சந்தேகிக்கப்படும் மடிக்கணினியொன்று அம்பாறை - பாலமுனை களப்பு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மொஹமட் சஹ்ரானின் கல்முனை பகுதி தொடர்பாளராக செயற்பட்ட ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் ஊடாக இந்த மடிக்கணினி கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். சந்தேகநபர் அம்பாறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

ஏனைய செய்திகள்