by Staff Writer 28-05-2019 | 7:48 PM
Colombo (News 1st) அம்பாறை - சாய்ந்தமருதிலிருந்து நேற்று முன்தினம் (26) கடற்றொழிலுக்கு சென்ற மூன்று மீனவர்கள் காணாமற்போயுள்ளனர்.
55 வயதான M.M.அமீர் அலி, 35 வயதான M.S.M. அன்சார் மற்றும் 41 வயதான M.S.M. நாசர் ஆகியோரே காணாமற்போயுள்ளனர்.
மீனவர்கள் காணாமற்போனமை தொடர்பில் கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் நேற்று காலை கரை திரும்பியிருக்க வேண்டும் என்ற போதிலும், இதுவரை திரும்பி வரவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், மீனவர்கள் காணாமற்போனமை தொடர்பில் உரிய பிரிவுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.