by Staff Writer 27-05-2019 | 2:15 PM
Colombo (News 1st) மஹரகம, பொரலஸ்கமுவ உள்ளிட்ட பல பகுதிகளுக்கு இன்று (27ஆம் திகதி) மதியம் ஒரு மணி முதல் இரவு 8 மணி வரையான 7 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
லபுகம கலட்டுவாவயில் இருந்து நீரை விநியோகிக்கும் பிரதான கட்டமைப்பில் ஏற்பட்ட திடீர் செயலிழப்பு காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, கொட்டாவ, பன்னிப்பிட்டிய, ருக்மல்கம, வத்தேகொட, ஹோமாகம, மீபே மற்றும் பாதுக்க ஆகிய பகுதிகளுக்கும் நீர்விநியோகம் தடைப்பட்டுள்ளது.