அரச சேவையாளர்களுக்கு இடைக்கால கொடுப்பனவு 

அரச சேவையாளர்களுக்கு மாதாந்தம் 2500 ரூபா இடைக்கால கொடுப்பனவு: சுற்றறிக்கை வௌியீடு

by Staff Writer 22-05-2019 | 3:17 PM
Colombo (News 1st) அரச சேவையாளர்களுக்கு மாதாந்தம் 2500 ரூபா இடைக்கால கொடுப்பனவு வழங்குவதற்கான சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது. ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த இடைக்கால கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் இதற்கான முன்மொழிவு செய்யப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இடைக்கால கொடுப்பனவிற்கான சுற்றறிக்கை தொடர்பில் திறைசேரியின் அனுமதியுடன் பொது நிர்வாகம் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சினூடாக அனைத்து அமைச்சுகளினதும் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த சுற்றறிக்கையூடாக அரச சேவையாளர்களுக்கு மாதாந்தம் 2500 ரூபா இடைக்கால கொடுப்பனவு வழங்கப்படுவதுடன், மாதாந்தம் வழங்கப்படும் 7800 ரூபா வாழ்க்கை செலவிற்கான கொடுப்பனவு தொடர்ந்தும் வழங்கப்படும் எனவும் நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.